தீ விபத்தில் காயம் அடைந்து சிகிச்சையில் இருந்த பெண் சென்னைக்கு மாற்றம்

தீவிபத்தில் காயம் அடைந்து மதுரை ஆஸ்பத்திரிகளில் சிகச்சை பெற்று வந்த 2 பெண்கள் சென்னை மற்றும் மதுரை தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு மாற்றப்பட்டனர்.
தீ விபத்தில் காயம் அடைந்து சிகிச்சையில் இருந்த பெண் சென்னைக்கு மாற்றம்
Published on

மதுரை:

தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட தீவிபத்தில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுட்ட 11 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயம் அடைந்து மதுரை, தேனி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் இறந்து விட்டனர். மேலும் 5 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

இவர்களில் தஞ்சாவூரைச் சேர்ந்த சாய் வசுமதி, 55 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று திடீரென மதுரை கென்னட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதேபோல காயம் அடைந்த சென்னை பார்கவி 73 சதவீத தீக்காயத்துடன் மதுரை மீனாட்சி மி‌ஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com