உயிரிழப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் இல்லை - மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களில் உயிரிழப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் இல்லை என மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். #TheniForestFire #குரங்கணிதீ
உயிரிழப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் இல்லை - மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்
Published on

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களில் உயிரிழப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் இல்லை என மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் இரண்டு குழுவினர் மலை ஏறும் பயிற்சியில் இன்று ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள்பட பலர் சிக்கினர். விசாரணையில் அவர்கள் சென்னை மற்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

காட்டுத்தீ குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:

காட்டுத்தீயில் சிக்கியவர்களில் குரங்கணி மலையில் இருந்து இதுவரை 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் இல்லை.

காட்டுத்தீயில் சிக்கியவர்களில் திருப்பூரை சேர்ந்த ராஜசேகர், பாவனா, சாதனா, ஈரோட்டை சேர்ந்த நேகா மற்றும் சென்னையை சேர்ந்த மோனிஷா, பூஜா, சகானா என 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் இருந்து 37 பேரும், சென்னையில் இருந்து 27 பேரும் டிரெக்கிங் சென்றுள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com