விளாங்குடியில் கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் நகை திருட்டு

விளாங்குடியில் கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் தங்க நகையை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.
விளாங்குடியில் கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் நகை திருட்டு
Published on

மதுரை:

மதுரை விளாங்குடி சொக்கநாதபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி அந்தப்பகுதியில் உள்ள முனியாண்டி கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார்.

அங்கு தரிசனத்தை முடித்து விட்டு திரும்பிய போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலி மாயமாகி இருந்தது. அதனை யாரோ கூட்ட நெரிசலில் அபேஸ் செய்து விட்டனர்.

இது குறித்து கூடல்புதூர் போலீசில் பிச்சை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

ஆனையூர், சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் சுப்பையா. இவர் வீட்டின் ஜன்னல் அருகே செல்போனை வைத்துவிட்டு படுத்திருந்தார். அப்போது அதனை யாரோ திருடிச் சென்று விட்டனர்.

இது குறித்து கூடல் புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com