காவி பெயிண்ட் அடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலை மீண்டும் நீல நிறத்திற்கு மாறியது

உத்தரப்பிரதேசத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலையை சீரமைத்த மாவட்ட நிர்வாகம் சிலைக்கு காவி பெயிண்ட் அடித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் நீல நிற பெயிண்ட் அடிக்கப்பட்டது.
காவி பெயிண்ட் அடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலை மீண்டும் நீல நிறத்திற்கு மாறியது
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் படாவுன் நகரத்தில் இருந்த அம்பேத்கர் சிலை சில நாட்களுக்கு முன்னதாக மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதேபோல, அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், படாவுன் நகரத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்டது. முன்னர் நீல நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு காவி நிற பெயிண்ட் அடிக்கப்பட்டது. இது செய்தியாக வெளியான நிலையில், அங்குள்ள பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் சிலைக்கு மீண்டும் நீல நிற பெயிண்ட் அடித்தனர். #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com