

புதுவை சின்ன வீராம்பட்டினம் விடுதியில் தங்கியுள்ள தங்க.தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறிய தாவது:-
புதுவை விடுதியில் இருந்து யாரும் வெளியேறவில்லை. ஊரில நடக்கும் விழாக்களுக்கும், சொந்த வேலை காரணமாகவும் வெளியே சென்று வருவார்கள். இன்று அல்லது நாளைக்குள் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். எல்லோருக்கும் நல்ல முடிவாக இருக்கும். இறுதி கட்டத்துக்கு வந்து விட்டோம்.
எடப்பாடி தரப்பினர் எங்களிடம் பேச்சு வார்த்தைக்கு வர நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் விரும்பினால் சரி. நேற்றைய தினம் அமைச்சர்கள் தினகரன் அணியையும் சேர்க்க கூறியுள்ளனர்.
நாங்கள் வேண்டுமென்றால் தினகரனை சந்தித்து பேசுங்கள். மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க. சேர்ந்தால் நல்லதுதான். எங்களுக்கு நல்லாட்சி தேவை. ஊழலற்ற ஆட்சியும், இரட்டை இலையும் தேவை.
எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் அணியில் எம்.எல். ஏ.க்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டு வருகிறது. எங்கள் நிலைப்பாட்டை எதிர் அணியினர் புரிந்து கொண்டுள்ளனர். இனியும் நல்ல முடிவு எடுக்கா விட்டால் அனைவருக்கும் ஆபத்து ஏற்படும்.
இவ்வாறு தங்க.தமிழ் செல்வன் கூறினார்.