தமிழகத்தில் ஆட்சியை யாரும் கலைக்க முடியாது - தம்பிதுரை

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் தமிழகத்தில் ஆட்சியை யாரும் கலைக்க முடியாது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
தமிழகத்தில் ஆட்சியை யாரும் கலைக்க முடியாது - தம்பிதுரை
Published on

கரூர்:

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் தமிழகத்தில் ஆட்சியை யாரும் கலைக்க முடியாது. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வருவதால் தமிழக அரசுக்கு பா.ஜ.க. அழுத்தம் கொடுக்க முயன்றால் வலியுறுத்தல் மேலும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவரிடம் திவாகரனை அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பு உள்ளதா? என கேட்டதற்கு, தலைமை கழகம் தான் முடிவு செய்யும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com