அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது- தளவாய் சுந்தரம் பேச்சு

ஜெயலலிதாவால் கட்டிக் காத்த அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என்று தளவாய் சுந்தரம் பேசியுள்ளார்.
தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடந்தது. நகரச் செயலாளர் சந்துரு தலைமை தாங்கினார். இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், முன்னாள் கவுன்சிலர் விக்ரமன், வக்கீல் ஜெயகோபால், ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் ராஜன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன், தலைமைக் கழக பேச்சாளர் நைனா முகமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.ரால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கட்டிக் காத்த இந்த இயக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் அரவணைத்துச் செல்கிறார்கள். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை நழுவவிட்டுவிடக்கூடாது.

இந்த இயக்கத்தில் இருந்து ஒருசிலர் வேறு இயக்கத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு அடையாளம் தெரியாமல் சென்றுள்ளார்களே தவிர எந்த முன்னேற்றமும் அடையவில்லை. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குமரி மாவட்டத்திலும் அ.தி.மு.க. ஆட்சியில்தான் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.

அணிச் செயலாளர்கள் சுகுமாரன், பொன் சுந்தர்நாத், சுந்தரம், ஒன்றியச் செயலாளர்கள் கிருஷ்ணகுமார், அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com