ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் ஜவுளி தொழில் பெரும் ஆபத்தை சந்தித்து உள்ளது: முன்னாள் எம்.பி. சுப்பராயன்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் ஜவுளித் தொழில் பெரும் ஆபத்தை சந்தித்து கொண்டிருக்கிறது என முன்னாள் எம்.பி. சுப்பராயன் கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் ஜவுளி தொழில் பெரும் ஆபத்தை சந்தித்து உள்ளது: முன்னாள் எம்.பி. சுப்பராயன்
Published on

குமாரபாளையம்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பா.ஜ.க. அரசின் கொள்கைகளை எதிர்த்து இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சார வாகனம் கோவையில் தொடங்கி திருச்சி வரை நடைபெறுகிறது. இந்த பிரச்சார வேன் நேற்று குமாரபாளையம் வந்தது. குமாரபாளையம் பழைய முருகன் தியேட்டர் முன்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கோவை முன்னாள் எம்.பி. சுப்பராயன் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு இந்தியாவை ஜாதி, மத வெறியை தூண்டி விடுகின்றன. சிறுபான்மை மக்களையும், தலித் மக்களையும் குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்து உள்ள ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் மூலம் மாநிலத்தின் உரிமைகளை மத்திய அரசு பறித்து உள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் பகுதிகளில் மிகுதியாக நடைபெற்று வரும் ஜவுளித் தொழில்கள் பெரும் ஆபத்தை சந்தித்து கொண்டிருக்கிறது. மேலும் சிறு, குறு தொழில்களை அழித்து வருகின்றன. விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது. எனவே மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அகற்றப்பட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com