அமெரிக்கா: கேளிக்கை நிகழ்ச்சியில் புகுந்து மர்மநபர் துப்பாக்கிச்சூடு - 8 பேர் பலி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் வீட்டில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சியில் புகுந்த மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தாக்குதல் நடத்திய நபர் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா: கேளிக்கை நிகழ்ச்சியில் புகுந்து மர்மநபர் துப்பாக்கிச்சூடு - 8 பேர் பலி
Published on

நியூயார்க்:

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஃப்ளானோ நகரில் உள்ள ஒரு வீட்டில் கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை அந்த வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தான்.

இந்த திடீர் தாக்குதலில் வீட்டிலிருந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மர்மநபரை சுட்டுக்கொன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர் அந்த வீட்டில் இருந்த பெண்ணுக்கு தெரிந்தவர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு முன்னர் வீட்டுக்கு வெளியே அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் பின்னர் கோபமுடன் தன்னுடைய துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com