இந்திய டெலிகாம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.17 சதவிகிதம் அதிகரிப்பு

இந்தியாவில் மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பிப்ரவரி 2017 மாதத்தில் மட்டும் 1.17 சதவிகிதம் வளர்ச்சியடைந்து இருப்பதாக இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டெலிகாம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.17 சதவிகிதம் அதிகரிப்பு
Published on

புதுடெல்லி:  

இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிக்கையின் படி இந்தியாவில் மொபைல் மற்றும் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 110 கோடியை கடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2017 வரையிலான காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ள நிலையில் முந்தைய காலக்கட்டத்தை விட 1.17 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளது என டிராய் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் 13.75 கோடி பேர் இணைந்துள்ள நிலையில் லேண்ட்லைன் இணைப்புகளுக்கான மோகம் குறைந்து வருகின்றன. இதற்கு மலிவு விலை மொபைல் போன்களின் வரவு தான் முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பல்வேறு இலவசங்களும் காரணம் என கூறப்படுகிறது.  

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ கால் பதித்தது முதல், ஜியோ உட்பட முன்னணி நிறுவனங்களான பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் சார்பில் அதிகப்படியான சலுகைகள் மற்றும் விலை குறைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்தியாவில் டெலிபோன் வாடிக்கையாளர்கள் ஜனவரி 2017 முதல் பிப்பரவி 2017 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 1.17 சதவிகித வளர்ச்சியை சந்தித்து உள்ளது என தெரிவிக்கப்ப்டடுள்ளது. உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக மொபைல் போன் சந்தாதாரர்கள் அதிகம் வசிக்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com