மெரினா கடலில் ராட்சத அலையில் சிக்கி தெலுங்கானா தொழில் அதிபர் பலி

மெரினா கடலில் திடீரென்று எழுந்த ராட்சத அலையில் சிக்கி தெலுங்கானா தொழில் அதிபர் சுரேஷ்குமார் பலியானார்.
மெரினா கடலில் ராட்சத அலையில் சிக்கி தெலுங்கானா தொழில் அதிபர் பலி
Published on

சென்னை:

தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 48). தொழில் அதிபர். இவர், தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தார். மெரினா கடலில் இறங்கி குடும்பத்தினருடன் உற்சாக குளியல் போட்டார்.

அப்போது திடீரென்று எழுந்த ராட்சத அலையில் சிக்கி சுரேஷ்குமார் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அபாய குரல் எழுப்பினர். உடனடியாக அப்பகுதியில் இருந்த மீனவர்கள் சிலர் கடலுக்குள் நீந்திச்சென்று சுரேஷ்குமாரை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் சுரேஷ்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை மீனவர்கள் மீட்டு கரைக்கு தூக்கி வந்தனர். சுரேஷ்குமாரின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

தகவல் அறிந்து வந்த அண்ணா சதுக்கம் போலீசார் சுரேஷ்குமாரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com