ஆஷஸ் தொடரில் ஸ்மித் அபாரம்: அஸ்வின் புகழாரம்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ரன் மெஷினாக திகழ்ந்து வரும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்திற்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆஷஸ் தொடரில் ஸ்மித் அபாரம்: அஸ்வின் புகழாரம்
Published on

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் 65 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

இந்த ஆஷஸ் தொடரில் ஸ்மித் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பிரிஸ்பேனில் மற்ற பேட்ஸ்மேன்கள திணறிய நிலையில் அவுட்டாகாமல் 141 ரன்கள் குவித்து அசத்தினார். அடிலெய்டில் நடைபெற்ற பகல்-இரவு டெஸ்டில் முதல் இன்னிங்சில் 40 ரன்களும், 2-வது இன்னிங்சில் 6 ரன்களும் எடுத்தார்.

ஆனால், பெர்த்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் 239 ரன்கள் விளாசினார். தற்போது மேல்போர்ன் டெஸ்டில் 65 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார். இதுவரை ஐந்து இன்னிங்சில் 491 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 163.66 ரன்களாகும். டெஸ்ட் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற டான் பிராட்மேன் சாதனையை முறியடிக்க இருக்கிறார். இந்த வருடத்தில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

கிரிக்கெட் டெஸ்டை பொறுத்தவரையில் ஸ்மித்துதான் சிறந்த வீரர் என்று கிரிக்கெட் விமசகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், ஸ்மித் பேட்டிங்கிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

ஸ்மித் பேட்டிங் குறித்து அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஒருநாள் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு அணிகள் அவருடன் உட்கார்ந்து பேச வேண்டும். அப்போது ஸ்மித் இவ்வளவு ரன்கள்தான் அடிக்க வேண்டும் என்பதை இருதரப்பும் ஒத்துக்கொள்ள வேண்டும்’’ என்று நகைச்சுவை வடிவில் டுவிட் செய்து புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com