டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் மாடல் டியாகோ இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரவேற்பை தொடர்ந்து விற்பனையை அதிகரிக்க டியாகோ ஸ்போர்ட் பதிப்பினை வெளியிட டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களில் டாடா டியாகோ ஸ்போர்ட் பிப்ரவரி 2018-இல் வெளியிடப்படலாம் என கூறப்பட்டுள்ளது. புதிய டியாகோ ஸ்போர்ட் இந்தியாவில் விலை குறைந்த ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய டியாகோ ஸ்போர்ட் மாடலில் ஏரோடைனமிக் பாடி கிட்ஸ், புதிய கிராஃபிக்ஸ், மற்றும் ஏற்கனவே வழங்கப்படும் நிறங்களில் கிடைப்பதோடு புதிய அலாய் வீல்களும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை நெக்சானின் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு 3-சிலிண்டர், ரெவோடிரான் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த இன்ஜின் 108 பி.எச்.பி. பவர் மற்றும் 170 என்.எம். பீக் டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வேகமாக செல்லும் போதும் சீரான கண்ட்ரோல் வழங்க சடஸ்பென்ஷன் ஸ்டிஃப் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஸ்போர்ட் சீட் அமைப்பு, அலாய் பெடல் மற்றும் இன்டீரியரில் பிரத்யேக ட்ரிம் செய்யப்படும் என கூறப்படுகிறது.