

வரலாற்று சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.
இதையொட்டி தமிழக டி.ஜி.பி. திரிபாதி நேற்று தஞ்சைக்கு வந்தார். பின்னர் அவர் போலீஸ் அதிகாரிகளுடன் சென்று பெரிய கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கும்பாபிஷேகம் தொடர்பான பாதுகாப்பு பணி ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதற்கு அவர் தலைமை தாங்கி போலீசார் மத்தியில் பேசினார்.
இதில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ், மற்றும் டி.ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.