தஞ்சையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற வாலிபர் கைது

தஞ்சையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை கரந்தை சி.ஆர்.சி. டெப்போ அருகே வாலிபர் ஒருவர் அரசு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி அதனை அதிக விலைக்கு விற்று வருவதாக கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் ஒரு வாலிபர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தஞ்சையை அடுத்த பனவெளியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 35) என்பதும், அவர் டாஸ்மாக்கில் மது பாட்டில் வாங்கி அதனை வெளியே அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com