தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி

தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள மணத்திடல் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் சேவியர் (வயது 73). கூலி தொழிலாளி.

இவர் நேற்று மணத்திடல் பாலத்தில் இருந்து வளப்பக்குடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் சேவியர் மீது மோதியது. இதில் சேவியருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதுகுறித்து நடுக்காவிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com