தஞ்சை அருகே விபத்தில் கூலி தொழிலாளி பலி

தஞ்சை அருகே விபத்தில் கூலி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
தஞ்சை அருகே விபத்தில் கூலி தொழிலாளி பலி
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள மூர்த்தி அம்பாள்புரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் சதிஷ்குமார் (வயது 26). கூலி தொழிலாளி.

இவர் சம்பவத்தன்று தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது முன்னால் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த சதிஷ்குமார் முன்னாள் சென்ற சைக்கிளை பார்த்தவுடன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com