கூலி வேலைக்காக ஆந்திராவுக்கு படையெடுக்கும் தமிழர்கள்

கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சேர்ந்தவர்கள் தினமும் 100 வேன்களில் வேலைக்காக ஆந்திராவுக்கு சென்று வருகிறார்கள்.
கூலி வேலைக்காக ஆந்திராவுக்கு படையெடுக்கும் தமிழர்கள்
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது.

மாதர்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சேர்ந்தவர்கள் தினமும் கூலி வேலைக்காக ஆந்திரா எல்லையை தாண்டி சென்று அங்குள்ள ஸ்ரீசிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு படையெடுக்கிறார்கள். மாதர்பாக்கத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீசிட்டி தொழில் நகருக்கு தினமும் 100 வேன்களில் தமிழக தொழிலாளர்கள் சென்று வருகிறார்கள்.

மாதர்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் ஆந்திர தொழிற்சாலைகளில் தினக்கூலி அடிப்படையில் வேலைசெய்து வருகிறார்கள். மாதர்பாக்கம் பகுதிகளில் தொழிற்சாலைகள் இல்லாத காரணத்தாலும் ஆந்திராவில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதாலும் அங்கு செல்கிறார்கள். வேலைக்காக சென்னை வரவேண்டும் என்றால் அதிக நேரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால் அப்பகுதி மக்களின் பார்வை ஆந்திர தொழிற்சாலைகள் மீது விழுந்துள்ளது.

மாதர்பாக்கம் அருகே தேர்வாய் கண்டிகையில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க 2009-ம் ஆண்டு திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் தற்போது தனியார் டயர் கம்பெனி உள்பட சில தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

ஆனால் அதில் சரியான வேலை வாய்ப்பு கிடைக்காததால் தமிழர்கள் ஆந்திராவுக்கு செல்கிறார்கள்.மாதர்பாக்கம் சிப்காட்டில் இங்கும் தொழிற்சாலைகள் அமைத்து முழுமையாக செயல்பட்டால் 3500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும்.

சூரப்பூண்டி, மணலூர் பகுதியில் கெமிக்கல் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு இதுவரை சுற்றுச் சூழல் அனுமதி கிடைக்கவில்லை. இது போன்ற காரணத்தினாலும் தொழிற்சாலைகள் வருவதில் தாமதம் ஏற்படுகிறது.

அதனால் கம்பெனிகள் ஆந்திராவில் உள்ள ஸ்ரீசிட்டி சிப்காட் தொழிற் பூங்காவுக்கு சென்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com