மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 12,400 கனஅடியாக அதிகரிப்பு

அணையில் தற்போது 45.08 டி.எம்.சி. தண்ணீர்இருப்பு உள்ளது.
mettur dam
Published on
Summary

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 12 ஆயிரத்து 400 கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு 5692 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 4960 கனஅடியாக குறைந்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 83.07 அடியாக இருந்தது.

கர்நாடக அணைகளில் இருந்து கடந்த மாதம் 1-ந் தேதி முதல் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியை தாண்டியது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டநிலையில் பின்னர் அது படிபடியாக அதிகரித்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு வந்தது.

நீர்வரத்து குறைந்தது

இந்த நிலையில் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது. இதற்கிடையே இன்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 12 ஆயிரத்து 400 கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு 5692 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 4960 கனஅடியாக குறைந்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 83.07 அடியாக இருந்தது. அணையில் தற்போது 45.08 டி.எம்.சி. தண்ணீர்இருப்பு உள்ளது.

ஒகேனக்கல்

இதே போல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் படிபடியாக நீர்வரத்து குறைய தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. ஆனாலும் தொடர்ந்து ஆற்றில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com