நாகர்கோவில் வந்த வட மாநில ரெயிலில் 10 கிலோ குட்கா சிக்கியது

சோதனை செய்தபோது முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டியில் ஒரு பை கேட்பாரற்று கிடந்துள்ளது.
நாகர்கோவில் வந்த வட மாநில ரெயிலில் 10 கிலோ குட்கா சிக்கியது
Published on: 
Summary

சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பையை எடுத்து பார்த்த போது, அதில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. 10 கிலோ அளவில் குட்கா பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், நாகர்கோவில் ெரயில்வே போலீஸ்நிலையம் கொண்டு வந்தனர்.

குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, வட மாநிலங்களில் இருந்து ெரயில்கள் மூலம் கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை கண்டறிய ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரெயில்வே போலீஸ்

அதன்படி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான தனிப்படையினர் நேற்று இரவு வட மாநிலங்களில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயில்களில் சோதனை நடத்தினர்.

குட்கா

நியூ ஜல்பைகுரியிலிருந்து நாகர்கோவில் வந்த எக்ஸ்பிரசில் அவர்கள் சோதனை செய்தபோது முன்பதிவு செய்யப்படாத பொதுப் பெட்டியில் ஒரு பை கேட்பாரற்று கிடந்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பையை எடுத்து பார்த்த போது, அதில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. 10 கிலோ அளவில் குட்கா பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், நாகர்கோவில் ெரயில்வே போலீஸ்நிலையம் கொண்டு வந்தனர்.

ரெயில்வே போலீசார்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உள்ள போலீசார், ெரயிலில் குட்காவை கடத்தி வந்தது யார்? எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் ஆவணங்களை உரிய மேல் நடவடிக்கைக்காக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க ரெயில்வே போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

வட மாநில ரெயில்களில் தொடர்ந்து இதுபோன்று குட்கா கடத்தப்படுவதால், ரெயில் நிலையங்களில் சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com