தமிழகத்தில் அதிக வெப்பம் பதிவான இடங்கள்... டாப் 10 லிஸ்ட்

ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்துவந்தாலும், மறுபுறம் வெய்யில் வாட்டி வதைக்கிறது.
தமிழகத்தில் அதிக வெப்பம் பதிவான இடங்கள்... டாப் 10 லிஸ்ட்
Published on

weather update heat wave hits triple digits in te places across tamil nadu

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறகு. நாடு முழுக்க இந்தாண்டு கோடை வெப்பம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகளவில் பதிவாகி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் அதீத வெப்பம் காரணமாக வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திழ்நாட்டில் இன்று (மே 26) 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்துவந்தாலும், மறுபுறம் வெய்யில் வாட்டி வதைக்கிறது.

வேலூரில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்திருந்த நிலையில், அதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக சென்னை (மீனம்பாக்கம்) - 105.98 டிகிரி பாரன்ஹீட்

டாப் 10 லிஸ்ட்:

வேலூர் - 106.7 டிகிரி பாரன்ஹீட்

மீனம்பாக்கம் 105.98 டிகிரி பாரன்ஹீட்

திருத்தணி - 105.98 டிகிரி பாரன்ஹீட்

மதுரை நகரம் - 102.92 டிகிரி பாரன்ஹீட்

பாளையங்கோட்டை - 102.38 டிகிரி பாரன்ஹீட்

நுங்கம்பாக்கம் - 102.38 டிகிரி பாரன்ஹீட்

திருச்சி - 101.66 டிகிரி பாரன்ஹீட்

மதுரை விமான நிலையம் - 101.3 டிகிரி பாரன்ஹீட்

கடலூர் - 100.94 டிகிரி பாரன்ஹீட்

தஞ்சாவூர் - 100.4 டிகிரி பாரன்ஹீட்

X

Maalai Malar
www.maalaimalar.com