டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி பெண்கள் சாலை மறியல்

பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் நடந்து செல்லும்போது கடும் இடையூறுகளும், பாதுகாப்பற்ற சூழலும் நிலவி வந்ததாக கூறப்படுகிறது
டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி பெண்கள் சாலை மறியல்
Published on: 
Summary

கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பெண்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கக்கன் நகர் பெண்கள் இன்று காலை திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று, சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காட்டுமன்னார்கோவில் தெற்கிருப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடு மற்றும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

விபத்துகள்

இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதோடு, பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் நடந்து செல்லும்போது கடும் இடையூறுகளும், பாதுகாப்பற்ற சூழலும் நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

கோரிக்கை

இதனால் இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பெண்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கக்கன் நகர் பெண்கள் இன்று காலை திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று, சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போலீசார்

இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சோழதரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சையத் அப்சல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த டாஸ்மாக் கடையை 15 நாட்களுக்குள் வேறு இடத்திற்கு மாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

சாலை மறியல்

இதனையடுத்து அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக்கொண்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. போலீசார் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் அளித்த இந்த உறுதியை அதிகாரிகள் காலம் கடத்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com