

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ மார்கண்டேயனை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பபதாவது:-
சர்வாதிகார சோஃபா மாடல் அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம்.
சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி - மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களிடம் நலம் விசாரித்தோம்.
அவரின் விடுதலைக்காக கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.
மிசா - எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்.
விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.