

சென்னையில் 15 மண்டலங்களை ஒருங்கிணைக்க அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரமேஷ், லோகேஷ் தமிழ்செல்வன், அருண்ராஜ், விஜய் பாலாஜி, பிரபு, விஜய் தமிழன் பார்த்திபன், விக்னேஷ் ஆகியோரும் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக ரமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தண்டையார்பேட்டை மற்றும் மாதவரம் மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக லோகேஷ் தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டல பொறுப்பு அமைச்சராக அருண்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக விஜய் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ஆலந்தூர் மற்றும் அடையார் மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக விஜய் தமிழன் பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மண்டல வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பேரிடர் கால நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.