கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு

கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
temple robbery
Published on: 
Summary

கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த கல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது.

மாரியம்மன் கோவில்

இந்த கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கம்போல் இரவு கோவில் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் வழக்கம்போல் கோவிலை திறப்பதற்காக வந்தபோது, கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

உண்டியல் பணம் திருட்டு

இதனால் அதிர்ச்சியான அவர், இதுகுறித்து ஊர் முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கோவிலுக்கு வந்து பார்த்தனர். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பரபரப்பு

தகவலின்பேரில் ராமநத்தம் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com