

தமிழக அரசின் உத்தரவை மீறி சிலர் சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு கனிமவள கடத்தலில் ஈடுபடுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் உடனடியாக ஆய்வு நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு நாள் தோறும் ஏராளமான லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தது.
மேலும், அதிகளவில் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு கடத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்ல 3 மாத காலம் தற்காலிக தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது தமிழக அரசின் உத்தரவை மீறி சிலர் சட்டவிரோதமாக அண்டை மாநிலங்களுக்கு கனிமவள கடத்தலில் ஈடுபடுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் உடனடியாக ஆய்வு நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடிப்படையில் தமிழக-கேரளா எல்லைப் பகுதியான புளியரை பகுதியில் கனிமவளத்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் போலீசார் மற்றும் டி.ஐ.ஜி.யின் சிறப்பு காவல் படை உள்ளிட்ட துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து தீவிர வாகன சோதனை நடத்தினர்.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் முழுமையான சோதனைக்கு உட்படுத்திய பிறகே கேரளாவிற்குள் அனுமதித்து வருகின்றனர். விடிய, விடிய இந்த வாகன சோதனை நீடித்தது. இதில் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.