

அம்பத்தூர் தொழிற்பேட்டை மதுரவாயல் நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் குறுகிய பாதையில் நீண்ட நேரம் காத்திருந்து செல்கின்றன. இந்த சாலையில் சென்றபோது விஜய் மாநகர பஸ்சில் சிக்கி பலியாகிவிட்டார்.
திருவாரூரை சேர்ந்தவர் விஜய் (வயது38). திருமங்கலத்தில் தங்கி கேட்டரிங் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை மதுரவாயல் நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் சென்றார். அப்போது செங்குன்றத்தில் இருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை வழியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையம் நோக்கி சென்ற மாநகரபஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விஜய் பரிதாபமாக பலியானார்.
தகவல் அறிந்ததும் அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை மதுரவாயல் நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அவ்வழியே செல்லும் வாகனங்கள் குறுகிய பாதையில் நீண்ட நேரம் காத்திருந்து செல்கின்றன. இந்த சாலையில் சென்றபோது விஜய் மாநகர பஸ்சில் சிக்கி பலியாகி விட்டார். உயிரிழந்த விஜய்யின் மனைவி சத்யா தலைமை செயலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.