நடிகர் விஜய் கட்சிக்கு தேர்தல் சின்னம் என்ன?

கொடியின் நிறம் மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்படுகிறது.பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
நடிகர் விஜய் கட்சிக்கு தேர்தல் சின்னம் என்ன?
Published on

சென்னை:

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

விஜய் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

கட்சியின் பெயரை கூறி தொண்டர்கள் வீடு வீடாக சென்று இனிப்பு வழங்கி அறிமுகம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அடுத்த கட்டமாக விஜய் கட்சியின் கொடியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கொடியின் நிறம் மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்படுகிறது.

இந்நிலையில் கட்சி யின் சின்னம் பற்றி கட்சி தலைவர் விஜய் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

கட்சி சின்னம் பெண்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக ஆலோசனை செய்து சின்னம் தேர்வு செய்யப்பட உள்ளது.

ஏற்கனவே தேர்தல் கமிஷனுக்கு 5 சின்னம் கொடுக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக பெண்களை கவரும் வகையில் கட்சி சின்னம் தேர்வு செய்யப் பட்டு தேர்தல் கமிஷனுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com