“ஏஐத் துறை ஒன்றை வைத்தே நாங்கள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம்” - அமைச்சர் குமார்

தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமம் வரை டிஜிட்டல் இணைப்பு வழங்கப்படும்.
“ஏஐத் துறை ஒன்றை வைத்தே நாங்கள் நாங்கள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம்” - அமைச்சர் குமார்
Published on

தமிழ்நாடு சட்டப்பேரைவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய ஏஐ மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குமார்.,

“1.5 மில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய எங்களுக்கு இந்த ஒருத்துறை போதும். 54 துறைகளிலும் இந்த ஒரு துறைதான் மிக முக்கியமானது. செயற்கை நுண்ணறிவுதான் மிக முக்கியமானது.

உங்களுடைய அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் கொண்டுவரவேண்டுமா செயற்கை நுண்ணறிவுதான் முக்கியம். என்னைத் தேர்ந்தெடுத்த வேளச்சேரி மக்கள் இனி சாலை, மின்சாரம், குடிநீர் என எந்தப் பிரச்னை என்றாலும் அதை அரசிடம் கொண்டுசெல்ல இனி சிரமப்பட வேண்டாம். ஆங்கிலம் படிக்கவோ, எழுதவோ தெரிந்திருக்க தேவையில்லை. வேளச்சேரி தொகுதிக்கு தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் பிரச்னைகளை தாய்மொழியில் வாக்குமூலமாக கொடுத்தாலே ஏஐ மூலமாக சம்பந்தப்பட்ட துறைக்கு புகார் தானாக சென்றுவிடும். இப்போது வேளச்சேரிக்கு இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.

வெகுவிரைவாக அரசு கேபிள்டிவி கார்ப்பரேஷன் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தமிழ்நாடு ஏஐ விஷன் என்ற புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும். சி.எம்.2.0 டேஷ்போர்டு ஏஐ உதவியுடன் உருவாக்கப்படும்.” என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com