Life நல்லா இருக்கணுமா Wife-அ நல்லா பாத்துக்கங்க: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் அட்வைஸ்

Wife-ஐ நல்லா பாத்துக்குறான் பாரு அவன் Life தான் நல்லா இருக்கும்.
தீபாவளி திருநாள்
தீபாவளி திருநாள்
Published on: 

தீபாவளி திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் மக்கள் புத்தாடை வாங்க குவிந்துள்ளனர். இதனால் மக்கள் தங்களுடைய பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ள போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமான இடங்களில் கோபுரம் அமைத்து மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். மதுரை மாசி வீதி பகுதியில் மக்கள் குவிந்துள்ளனர். மக்களுக்கு ஓய்வு பெற்ற ஆய்வாளர் ஒருவர் அறிவுரை வழங்கி கொண்டிருந்தார்.

Life நல்லா இருக்கணுமா

அப்போது "உடம்ப கும்முன்னு பாத்துக்கங்க. Life நல்லா இருக்கணுமா Wife-ஐ நல்லா பாத்துக்கங்க... Wife-ஐ நல்லா பாத்துக்குறான் பாரு அவன் Life தான் நல்லா இருக்கும்.

நம்ம வந்த வாழ்க்கை, அவங்கள வாழ வைக்கிறதுக்கு. ஒவ்வொரு ஆண்மகனும் நம்ப வாழ்வதற்கான இந்த உலகத்திற்கு வரல. குடும்பத்தை வாழ வைச்சு, குழந்தைகளை படிக்க வைச்சு அவங்களுக்கு நல்லது செய்யத்தான் நம்மல படைச்சிருக்காரு. அவங்கள சந்தோசமாக பார்த்துக்கங்க" என்றார்.

இக்கருத்தை மக்கள் கேட்டுக் கொண்டே புத்தாடைகள், பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.

X