மதுராந்தகத்தில் 3 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது

தொகுதி முழுவதும் பதட்டமான 60 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
voters
வாக்காளர்கள்
Published on: 
Summary

அச்சரப்பாக்கம் ஒன்றியம் கீழாமூர் ஊராட்சி யில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வரிசைப்படி முதல் எந்திரம் வைக்கப்படாமல் 2-வது எந்திரம் முதலாவதாக வைக்கப்பட்டு இருந்தது. இதனால் வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

மதுராந்தகம் ஒன்றியம், தண்டரை புதுச்சேரியில் உள்ள வாக்குச்சாவடி எண் 55-ல் வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும் பட்டனில் கருப்பு மை போன்று இருந்தது. இதனால் எந்திரம் வேலை செய்யவில்லை. இதையடுத்து மாற்று வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டு ஓட்டுப்பதிவு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

அச்சரப்பாக்கம் ஒன்றியம் பாப்பநல்லூர் வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் மாற்று எந்திரம் கொண்டு வரப்பட்டு தாமதாக வாக்குப்பதிவு தொடங்கியது. இதேபோல் மதுராந்தகம் ஒன்றியம் புக்கத்துறை ஊராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்ததால் தாமதமானது.

அச்சரப்பாக்கம் ஒன்றியம் கீழாமூர் ஊராட்சி யில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வரிசைப்படி முதல் எந்திரம் வைக்கப்படாமல் 2-வது எந்திரம் முதலாவதாக வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி வாக்காளர்கள் அங்கிருந்த தேர்தல் அலுவலருக்கு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக வைக்கப்பட்டு மீண்டும் ஓட்டுப்பதிவு பதிவு தொடங்கின.

தொகுதி முழுவதும் பதட்டமான 60 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவம் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கள்ளபிரான்புரம் வாக்குப்பதிவு மையத்தில் பெண்கள் மட்டும் வாக்களிக்கக்கூடிய வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com