பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னரை சந்தித்தார் விஜய்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார்.எல்லா சுழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக துணை நிற்பேன்.
பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னரை சந்தித்தார் விஜய்
Published on

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சம்பவத்தை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனை தொடர்ந்து இன்று காலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். அக்கடிதத்தில், எல்லா சுழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக துணை நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும் என குறிப்பிட்டு இருந்தார்.

அதனைத் தொடர்ந்து, கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கவர்னருடனான சந்திப்பின் போது விஜயுடன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com