மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கிய விஜய்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் முதல்வர் விஜய்யை நேற்று சந்தித்தார்.
vijay
Published on

தமிழகத்தில் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தி.மு.க. கூட்டணியில் ஒரு ராஜ்யசபா சீட்டை கேட்டுப் பெற்ற காங்கிரஸ் கிறிஸ்டோபர் திலக் எம்.பி.யாக தேர்வானார்.

தமிழக வெற்றிக் கழகத்திடம் மாநிலங்களவை சீட்டை காங்கிரஸ் எதிர்பார்த்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் முதல்வர் விஜய்யை நேற்று சந்தித்தார்.

இதற்கிடையே, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜயை இன்று சந்தித்த கிரிஷ் சோடங்கர் இந்தியா கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com