2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
CP Radhakrishnan
Published on

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் செங்கல்பட்டு, திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க என 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து வருகிற 16-ந்தேதி காலை தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.

அதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவிலும், அதன்பின்னர் தியாகராயநகரில் உள்ள வாணி மகாலில் நடைபெறும் நாகாலாந்து முன்னாள் கவர் னர் இல.கணேசனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியிலும், தொடர்ந்து டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் நடக்கும் புத்தக வெளியிட்டு விழாவிலும் பங்கேற்கிறார்.

அதன்பின்னர் 17-ந்தேதியன்று சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்க லைக்கழகம் செல்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

இதையடுத்து தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதனை முடித்துவிட்டு திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு டெல்லி சென்றடைகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com