பெரியார் விவகாரம்: பைத்தியம் பிடித்தவர்களுக்கு தேவை சிகிச்சையே தவிர, பதில் அல்ல- கி.வீரமணி

பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம்.நாம் எப்பொழுதும் பகுத்தறிவு உள்ளவர்களுக்கு தான் பதில் சொல்வோம்.
பெரியார் விவகாரம்: பைத்தியம் பிடித்தவர்களுக்கு தேவை சிகிச்சையே தவிர, பதில் அல்ல- கி.வீரமணி
Published on

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சீமானின் கருத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதனிடையே பெரியார் பற்றிய எனது கருத்துக்கு திராவிடர் கழகத் தலைவரான வீரமணி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், கடலூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சீமானை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.

திருமண விழாவில் பேசிய அவர், "பெரியாரை பற்றி யார் யாரோ பேசுவதை குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார். நாம் எப்பொழுதும் பகுத்தறிவு உள்ளவர்களுக்கு தான் பதில் சொல்பவர்கள், பைத்தியம் பிடித்தவர்களுக்கு அல்ல. பைத்தியம் பிடித்தவர்களுக்கு தேவை சிகிச்சையே தவிர பதில் அல்ல.

ஒருவரின் பெயரை சொல்லி இப்படி பேசுகிறாரே என்று என்னிடம் கேட்டார்கள். அடுத்ததாக இன்னொருவர் பெயரை சொல்லி அவரை இவர் ஆதரிக்கிறாரே என்று கேட்டார். நான் கேட்டேன் ஓர் ஒரு பைத்தியம் தான் இருக்க வேண்டும் என்று என்ன அவசியம்" என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com