கடைசி காலத்திலாவது நியாயமான நிதியை கொடுங்க - உதயநிதி ஸ்டாலின்

நிதி பங்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாடு. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதி பங்கீடு தொர்பாக கருத்து.
கடைசி காலத்திலாவது நியாயமான நிதியை கொடுங்க - உதயநிதி ஸ்டாலின்
Published on

மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிதியில் பாரபட்சம் காட்டுவதாக தென்னிந்திய மாநிலங்களில் இருந்து குரல் ஓங்கி ஒலிக்கிறது. நிதி பங்கீட்டில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், நிதி பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு ரூ.6 லட்சம் கோடி வரி கொடுத்துள்ள போதும், ரூ.1.58 லட்சம் கோடியை மட்டுமே வரிப்பகிர்வாக ஒன்றிய அரசு திருப்பிக் கொடுத்துள்ளது."

"ஆனால், ரூ.3.41 லட்சம் கோடி வரி கட்டிய உத்தர பிரதேசத்துக்கு கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் கோடி வரிப்பகிர்வை வாரி வழங்கியுள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள்."

"மாண்புமிகு, மரியாதைக்குரிய, பிரதமர் அவர்களே, ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே இப்போதாவது சொல்லுங்கள் நாங்கள் யாருடைய மரியாதைக்குரிய தகப்பனார் வீட்டு பணத்தை கேட்டோம்?"

"உங்கள் ஆட்சியின் கடைசி காலத்திலாவது, எங்களுக்கு நியாயமாக சேர வேண்டிய நிதிப்பகிர்வை தந்திடுங்கள்," என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com