தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, கட்சிப் பாடலை நாளை வெளியிடுகிறார் விஜய்

தவெக கட்சியின் கொடியை நாளை விஜய் அறிமுகப்படுத்துகிறார். தமிழக வெற்றி கழகத்தின் பாடலும் நாளை வெளியிடப்படுகிறது.
TVK FLAG VIJAY
Published on

நாளை காலை 9.15 மணிக்கு பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அக்கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்.தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com