தமிழக முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவி ஏற்பு விழா..! Live Updates

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராக பதவி ஏற்றார்.
தமிழக முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவி ஏற்பு விழா..! Live Updates

விஜயின் நீலாங்கரை வீட்டில் முழுமையான பாதுகாப்பு கான்வாய் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்திய பராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்துள்ளார்.

விஜய் முதல்வராக பதவி ஏற்க உள்ள நேரு உள்விளையாட்டுஅரங்கில் பாதுகாப்பிற்காக 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விஜய் அம்மா பதவி ஏற்பு விழா நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டுள்ளார். அவரிடம் கேட்கும்போது மிக மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆதர் அர்ஜுனா

நேரு ஸ்டேடியத்திற்கு வெளியில் குவிந்துள்ள த.வெ.க. தொண்டர்கள், ரசிகர்கள்.

புறப்பட்டார் விஜய்

முதலமைச்சராக பதவி ஏற்க நீலாங்கரை வீட்டில் இருந்து பாதுகாப்பு கான்வாய் வாகனங்களுடன் த.வெ.க. தலைவர் விஜய் புறப்பட்டார்.

சாலையோரங்களில் நின்று மக்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விஜய் பதவி ஏற்பதற்காக தயார் நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கம்.

நீலாங்கரையில் இருந்து நேரு மைதானத்திற்கு புறப்பட்டு வந்த விஜய்

மிகவும் பெருமையாக இருப்பதாக விஜயின் உறவினர் தெரிவித்தனர்.

விஜய் பதவி ஏற்கும் விழாவிற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார் திரிஷா.

விஜய் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான்

அமைச்சரவை பட்டியல் வெளியீடு

விஜய் அமைச்சராக பதவி ஏற்கும் அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளனர். செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, டி.கே. பிரவு, கீர்த்தனா உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்தார் விஜய்.

விஜய் பதவி ஏற்பு விழாவில முதல் வரிசையில் அமர்ந்த திரிஷா

தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்!

திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்.

பதவி ஏற்கும் விழாவில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள நாற்காலிகள்.

செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஏற்பாடு குறித்து பேசிய காட்சி

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய்க்கு வரவேற்பு அளிக்க தயாராகும் போலீஸ் அதிகாரிகள்.

ஆகு ளுநர் அர்லேகர் தனது மனைவியுடன் மக்கள் மாளிகையில் இருந்து நேரு மைதானம் புறப்பட்டார்.

நேரு மைதானத்திற்கு வருகை தந்தார் ராகுல் காந்தி

கோட் சூட் அணிந்து மிடுக்காக நேரு மைதானத்தில் விஜய்

நேரு மைதானம் வந்த ஆளுநரை வாயிலில் பூங்கொடுத்து கொடுத்து விஜய் வரவேற்றார்.

பதவி ஏற்பு விழா மேடையில் விஜய். ஆர்ப்பரித்த தொண்டர்கள்.

முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. பின்னர் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவி ஏற்றுக் கொண்டார் விஜய்.

விஜயை அடுத்து புஸ்சி ஆனந்த் அமைச்சராக பதவி ஏற்றார்.

3-வதாக ஆதவ் அர்ஜுனா அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

4-வதாக கே.ஜி. அருண் ராஜ் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

5-வதாக செங்கோட்டையன் அமைச்சராக பொறுப்பேற்றார்.

6-வதாக வெங்கடரமணன் அமைச்சராக பொறுப்பேற்றார்.

7-வதாக நிர்மல் குமார் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

8-வதாக ராஜ்மோகன் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

9-வதாக டி.கே. பிரபு அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

10-வதாக செல்வி. கீர்த்தனா அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்டு பதவி ஏற்பு விழா முடிவடைந்தது.

200 யூனிட் மின்சாரம், சிங்கபெண் சிறப்பு அதிரடிப்படை அமைப்பு உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்.

தமிழக அரசின் நிலை என்ன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை விடப்படும்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள்.

இணை, பக்கம் என சென்டர் ஏதும் கிடையாது. ஏதாவது செய்ய நினைக்கலாம், ஆட்டம் ஆடலாம் என நினைத்தால் அந்த எண்ணத்தை தற்போதே அழித்து விடுங்கள்- முதலமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

முதலமைச்சராக பதவி ஏற்ற த.வெ.க. தலைவர் விஜய், தலைமை செயலகம் சென்றார். தமிழக காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதை முதல்வராக விஜய் ஏற்றுக் கொண்டார்.

தலைமைச் செயலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்தார்.

சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு

12-ந்தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல்

X

Maalai Malar
www.maalaimalar.com