பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய டி.வி.- வீடு தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ராமனின் பேரக்குழந்தைகள் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவிவிட்டது.
டி.வி. வெடித்ததில் வீடு தீப்பற்றி எரிந்ததை காணலாம்.
டி.வி. வெடித்ததில் வீடு தீப்பற்றி எரிந்ததை காணலாம்.
Published on

காளையார்கோவில்:

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 65). இவரது ஓட்டு வீடு மறவமங்கலம் வருவாய் ஆய்வாளர் குடியிருப்புக்கு பின்புறம் உள்ளது.

நேற்று ராமனின் பேரக்குழந்தைகள் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென டி.வி. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. உடனே தீப்பிடித்து பரவ தொடங்கியது.

இதை பார்த்ததும் வீட்டில் இருந்த குழந்தைகள் அலறியபடி வெளியே ஓடி வந்தார்கள்.

சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீ பரவிவிட்டது. அக்கம்பக்கத்தினர் முயன்றும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், சிவகங்கை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த நிறைய பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துவிட்டன.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டி.வி. வெடித்து வீடு தீயில் எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com