மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது..!- முதலமைச்சர் விஜய்க்கு சாந்தனு நன்றி

என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
TN CM Vijay- Actor Shanthanu
Published on

மாரடைப்பால் மரணமடைந்த இயக்குனர் பாக்யராஜ் உடல் நேற்று நண்பகல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

திரைத்துறைக்கு இயக்குனர் பாக்யராஜ் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகரும், மறைந்த இயக்குனர் பாக்யராஜின் மகனுமான சாந்தனு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

மதிப்பிற்குரிய முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு.. உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது 247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்? மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.

என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை

அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.

அரசு மரியாதை!

மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை

என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதைக்கு வேறென்ன சொல்ல? இதயம் கூப்பிய நன்றி Anna.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com