ரெயில் பயணிகளின் கவனத்திற்கு! எழும்பூருக்கு பதிலாக தாம்பரம், கடற்கரை நிலையங்களில் இருந்து இயங்கும் ரெயில்கள்- முழு விவரம்

தஞ்சாவூர்-எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை மாம்பலம், கோடம்பாக்கம் பகுதியில் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
தாம்பரம் ரெயில் நிலையம்
தாம்பரம் ரெயில் நிலையம்
Published on

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சில ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து, கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது.

தாம்பரத்தில் இயக்கம்

மன்னார்குடி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் செப்டம் பர் 4-ந்தேதி முதல் அக்டோபர் 13-ந்தேதி வரை மன்னார்குடியில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் நிறுத்தப்படும்.

திருச்சி-எழும்பூர் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் செப்டம்பர் 9-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரையிலும் செப்டம்பர் 21- ந்தேதி முதல் அக்டோபர் 14-ந்தேதி வரையிலும் இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு மாம்பலத்தில் நிறுத்தப்படும்.

மும்பை சி.எஸ்.டி- எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை மும்பையில் இரவு 10.52 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு பதிலாக கடற்கரை நிலையத்தில் நிறுத்தப்படும்.

சேலம் எக்ஸ்பிரஸ்

சேலம்-எழும்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 12-ந்தேதி முதல் 15 -ந்தேதி வரை சேலத்தில் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மாம்பலத்தில் நிறுத்தப்படும்.

எழும்பூர்-மன்னார்குடி எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 5-ந்தேதி முதல் அக்டோபர் 14-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்படும்.

எழும்பூர்-சேலம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை இரவு 11.30 மணிக்கு கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்படும்.

தஞ்சாவூர்-எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ் 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை மாம்பலம், கோடம்பாக்கம் பகுதியில் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். மேலும் செப்டம்பர் 22-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரை இந்த ரெயில் மாம்பலம், கோடம்பாக்கம் பகுதியில் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com