கோட்டையில் சுதந்திரதின கொண்டாட்டம்: மெரினா காமராஜர் சாலை- அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்

அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர் போர்நினைவுச் சின்னம் அருகில் இறங்கிக் கொண்டு வாகனங்களை தீவுத்திடலில் உள்ளே நிறுத்த வேண்டும்.
போக்குவரத்து மாற்றம்
போக்குவரத்து மாற்றம்
Published on

தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கி கொண்டு வாகனத்தை கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும்.

சுதந்திர தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றியதை பற்றி போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதிவரை அமையப்பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலை ஆகிய சாலைகளில் வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர் தவிர மற்ற அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை-அண்ணா சாலை- முத்துசாமி பாலம்- முத்துசாமி சாலை- ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.

பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை -தலைமைச் செயலகம் வழியாக காமராஜா சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாரிஸ் கார்னர்- வடக்கு கோட்டை பக்க சாலை-ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு- முத்துசாமி சாலை- முத்து சாமி பாலம்- அண்ணாசாலை- வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.

அண்ணாசாலையில் இருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம்- முத்துசாமி சாலை- ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு - வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரி முனையை சென்றடையலாம். முத்துசாமி பாலத்தில் இருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை -வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.

சிவப்பு மற்றும் பர்ப்பில் வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கி கொண்டு வாகனத்தை கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும்.

சிவப்பு மற்றும் பர்ப்பில் வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணிக்கு பின்னர் போர் நினைவுச் சின்னம் கொடிமரச்சாலை முத்துசாமி பாலம்- முத்து சாமி ரோடு-வடக்கு கோட்டை பக்க சாலை- பாரிமுனை சந்திப்பு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

நீல மற்றும் பிங்க் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை- போர் நினைவுச்சின்னம் கொடிமரச்சாலை - முத்து சாமி பாலம் -முத்துசாமி சாலை- வடக்கு கோட்டை பக்க சாலை -பாரிமுனை சந்திப்பு ரிசர்வ் வங்கி கரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளிவாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

நீல மற்றும் பிங்க் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணிக்கு பின்னர் காமராஜர் சாலை - உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை - அண்ணா சாலை, முத்து சாமி பாலம் -வடக்கு கோட்டை பக்க சாலை -பாரிமுனை சந்திப்பு- ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிரில் உள்ள PWD வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

அனுமதி அட்டை இல்லாத வாகனங்களில் வருவோர் போர்நினைவுச் சின்னம் அருகில் இறங்கிக் கொண்டு வாகனங்களை தீவுத்திடலில் உள்ளே நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com