முதலிடம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம், சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது.
முதலிடம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!
Published on: 

தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயம் முதலில் பாடவேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேறிய நிலையில், இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்மொழி மற்றும் பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தை முன்னிலைப்படுத்துவதில் அரசு எந்த சமரசமும் செய்யாது என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com