திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Published on

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.

இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், புதுச்சேரி மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனையடுத்து புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டத்திற்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com