தக்காளி விலை தொடர்ந்து அதிகரிப்பு

மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும், வெளி மார்க்கெட்டில் உள்ள காயகறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Tomato
Published on: 
Summary

வறட்சி காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதால் வரும் நாட்களில் மேலும் வரத்து குறையும் பட்சத்தில் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநில மதனப் பள்ளி, குப்பம், விகோட்டா கர்நாடக மாநில ஒட்டுப் பள்ளி, கோலார் ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.

வழக்கமாக தினசரி 55 லாரிகள் வரை குவிந்து வந்த தக்காளியின் வரத்து கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தக்காளி

இந்த நிலையில் இன்று 35 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனை வந்து இருந்தன. இதனால் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும், வெளி மார்க்கெட்டில் உள்ள காயகறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வறட்சி

வறட்சி காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதால் வரும் நாட்களில் மேலும் வரத்து குறையும் பட்சத்தில் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வெங்காயம் விலை

இதேபோல் பெரிய வெங்காயம் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரகத்தை பொறுத்து ரூ.60வரையிலும், வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ ரூ.80 வரையிலும் விற்பனை ஆகி வருகிறது. சமையலுக்கு தினசரி பயன்படுத்தும் தக்காளி, வெங்காயம் விலை அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com