Tamil News Live: சாலை விரிவாக்கத்திற்கு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - 31 ஆகஸ்ட் 2026

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Tamil News Live: சாலை விரிவாக்கத்திற்கு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - 31 ஆகஸ்ட் 2026

கல்லூரியில் கட்டப்பட்ட படைப்பகம், நூலகம் பயன்பாட்டுக்க கொண்டு வரப்படும் - சேகர்பாபு கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதில்

புதிய கட்டடம், மாலை நேர வகுப்புகள் தொடங்க முன்னதாகவே நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது - அமைச்சர் ரமேஷ்

கொளத்தூர் தொகுதி கபாலீஸ்வரர் கல்லூரியில் மாலை நேர வகுப்புகள் தொடங்க வேண்டும், கூடுதல் கட்டடம் தேவை - சேகர் பாபு

அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தொடக்கப்பள்ளி விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வன்னி அரசு

வில்லிவாக்கம் ஒன்றியத்தில் பழங்குடியினர் மட்டும் வசிக்கும் பகுதியில் தொடக்கப்பள்ளி வேண்டும் - எம்எல்ஏ விஜய் பிரபு

எங்கெல்லாம் சமூக நீதி விடுதிகள் தேவையோ அங்கெல்லாம் கட்டிக்கொடுக்கப்படும்.

150-க்கும் மேற்பட்ட புதிய சமூக நீதி விடுதிகள் கட்டித்தரப்படும் என அறிவித்துள்ளோம்.

கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய கட்டடம் விரைந்து கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் - ஓ.எஸ்.மணியன் கேள்விக்கு வன்னி அரசு பதில்

திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஆட்சியர், எம்எல்ஏ உடன் கலந்து பேசி கள ஆய்வு மேற்கொண்டு தேவை அறிந்து நிதியை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏலகிரியில் வியூ பாயிண்ட் அமைப்பது தொடர்பாக ஆட்சியருடன் கலந்து பேசி நிதிநிலையை பொறுத்து நடவடிக்கை - அமைச்சர் ராஜேஷ்குமார்

கழிப்பறை வசதியுடன் கூடிய கட்டடம் விரைந்து கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் - அமைச்சர் வன்னி அரசு

ஜெயங்கொண்டம் இளைய பெருமாள் நல்லூரில் உள்ள ஆதிதிராவிட நலத்தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டடம் தேவை - வைத்தியலிங்கம்

ஜல்லிக்கட்டிற்கு எதிராக எம்எல்ஏ கருப்பையா கூறிய கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் - சபாநாயகர்

ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்துகளை கூறவில்லை - எம்எல்ஏ கருப்பையா விளக்கம்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக திண்டுக்கல் - குமுளி 4 வழிச்சாலை அமைக்கப்படுமா? - எம்எல்ஏ ஐங்கரன்

தீர்த்தகிரி மலை அடிவாரத்தில் உள்ள பழைய மடத்தை சுற்றலாத்தலமாக கருதி பாதுகாக்க வேண்டும் - சவுமியா அன்புமணி

அரூர் தொகுதி தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க அரசு முன்வருமா? - சம்பத் குமார்

நினைவிடத்தை தமிழ் பண்பாட்டு மையமாக மாற்றுவது தொடர்பாக அவரது குடும்பத்தாருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

மறைமலை அடிகளார் நினைவிடத்தை புதுப்பித்து தமிழ் பண்பாட்டு மையமாக உருவாக்க அரசு முன்வருமா? - எம்எல்ஏ காமாட்சி கேள்வி

தஞ்சை தமிழ் பல்கலை. வளாகத்தில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டு நிலுவையில் உள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட சோழர் அருங்காட்சியகம் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை - அமைச்சர் ராஜ்மோகன்

புறவழிச்சாலை தொடர்பான கோரிக்கை முன்பே வந்துள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது.

கிராமப்புற, நகர்ப்புற சாலைகளை நெடுஞ்சாலைகளுடன் முழுமையாக இணைப்பது தொடர்பாக கணக்கு எடுக்கப்படுகிறது - அமைச்சர் ஆதவ்

ஆலைகள் நிறைந்த தேன்கனிக்கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க புறவழிச்சாலை தேவை - எம்எல்ஏ ராமச்சந்திரன்

ரூ.139 லட்சத்தில் பொதுப்பணித்துறை மூலம் முதல்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

நாகை அருங்காட்சியகத்தை உரிய காலக்கெடு நிர்ணயித்து திறக்க வேண்டும்.

சோழர்காலத்தை சேர்ந்த ஆனைமங்கலம் செப்பேடுகளை நாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை

சாலைப்பணிகள், நெடுஞ்சாலையுடன் பிற சாலைகளை இணைப்பது தொடர்பாக 182 எம்எல்ஏக்கள் கோரிக்கை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

இணைப்பு சாலைகளால் அதிக விபத்துகள் ஏற்படும் நிலையில் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

மதுரை, கம்பம், தேனி, நெல்லை, சென்னை, கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை பரிசீலனையில் உள்ளது - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

பாலாற்றின் குறுக்கு உயர்மட்டச்சாலை அமைக்கப்படுமா? - எம்எல்ஏ தென்றல் குமார்

திருப்பூர் வேலாம்பாளையம் வரை 3 கிமீ சாலையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் - எம்எல்ஏ சத்தியபாமா கோரிக்கை

டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் இன்னும் 2 வழி, ஒரு வழி சாலைகள் அதிகம் உள்ளன.

சாலை விரிவாக்கத்திற்கு விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

மூலக்கேள்விக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டுமே கேளுங்கள் - சபாநாயகர்

ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.

சட்டசபையில் வினாக்கள் மற்றும் விடைகள் நேரம் தொடங்கியது.

தமிழக சட்டசபை 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.

கேள்வி நேரம் முடிந்ததும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com