Tamil News Live: சட்டசபையில் இன்று... தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் - 25 ஆகஸ்ட் 2026

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Tamil News Live: சட்டசபையில் இன்று... தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் - 25 ஆகஸ்ட் 2026

3 தமிழர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியும், சட்ட உதவியும் அரசு செய்ய வேண்டும் - உதயநிதி

சட்டத்துறை, வனத்துறை அமைச்சர்கள் இதுதொடர்பாக விரிவாக விளக்கம் அளித்துள்ளனர் - சபாநாயகர்

கர்நாடகத்தில் 3 தமிழர்கள் கொலை - உதயநிதி ஸ்டாலின் உரை

கர்நாடகாவில் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை என கூராய்வு அறிக்கை.

உயிரிழந்த தமிழர்கள் உடலில் காயம் இருந்ததாக கூராய்வு அறிக்கை வந்துள்ளது.

தமிழக அமைச்சர்கள் யாராவது கர்நாடகா சென்றார்களா?

3 தமிழர்கள் கொலையில் அரசின் நிலைப்பாடு என்ன?

சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com