Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 22 ஆகஸ்ட் 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 22 ஆகஸ்ட் 2026...

அமெரிக்கா-கனடா வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வி: 50% வரிகளுக்கு பதிலடியாக சமமான வரி விதிக்க கனடா பிரதமர் முடிவு!...

*வாஷிங்டனில் 3 நாட்கள் நீடித்த பேச்சுவார்த்தை முறிந்ததால் நள்ளிரவு முதல் அமெரிக்காவின் புதிய வரிகள் அமல்

*தூதுக்குழுவை உடனடியாக ஒட்டாவாவிற்கு திரும்ப அழைத்தது கனடா.

GOLD PRICE TODAY: நகை பிரியர்களுக்கு ஷாக்... ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்

* தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

சென்னையின் வரலாற்றைப் போற்றி பாதுகாப்போம் - கனிமொழி

* எண்ணற்ற கரங்களின் உழைப்பில் வளர்ந்த மெட்ராஸ் மாநகரம்

* இன்று சென்னையாக உயர்ந்து, கோடிக்கணக்கான மக்களின் கனவுகளைத் தாங்கி நிற்கிறது.

ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளா செல்ல விமான கட்டணம் பல மடங்கு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி...

*ரெயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு இடங்கள் ஏற்கனவே முழுமையாக நிரம்பிவிட்டதால், கடைசி நேரப் பயணத்திற்கு மக்கள் பெருமளவில் விமான சேவையை நாடத் தொடங்கியுள்ளனர்.

*இதைப் பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தியுள்ளன.

சௌகார் ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி - இன்று மாலை இறுதிச்சடங்கு

* சௌகார் ஜானகியின் வாழ்க்கையில் வானொலிக்கும் முக்கிய இடம் உண்டு.

* 2020-ம் ஆண்டு வெளியான 'பிஸ்கோத்' திரைப்படம் அவரது 400-வது படமாகக் குறிப்பிடப்படுகிறது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: டெண்டரை கைப்பற்றிய 2 பிரபல நகை நிறுவனங்கள்

*  ஒரு கிராம் எடையுள்ள 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

* ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டதில் 11 நிறுவனங்கள் தங்களது விலைப்புள்ளி விவரத்தினை தெரிவித்தன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com