
முதலமைச்சர் விஜய்யின் சாதனைகளை ஆந்திரா, கேரளா, கர்நாடகா மட்டுமல்ல, அனைத்து வடமாநிலங்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். தளபதி விஜய் போல, நமக்கும் ஒரு முதல்வர் அமையமாட்டாரா என அனைவரும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்- பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி.
சினிமா படங்களை தான் பிறமொழிகளில் டப்பிங் செய்து மக்கள் பார்த்து ரசிப்பதை கண்டிருக்கிறேன். ஆனால் எங்கள் தலைவரின் சட்டமன்ற உரையையும், பொதுகூட்ட பேச்சையும் டப்பிங் செய்து பிறமொழி பேசும் வேற்று மாநிலத்தினரும் கேட்கின்றனர்.
நான் தடுமாறிக்கொண்டிருந்தபோது, எனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதா என்று நினைத்தபோது, என்னைத் தூக்கிப்பிடித்து வருவாய்த் துறை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் இன்றைய முதலமைச்சர்- அதிமுக எம்.எல்.ஏ ராகேஷின் பேச்சுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்.
அதிமுகவும் தவெகவும் ஒன்று என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். ஒரு தலைவர் கொண்டு வரும் திட்டம், அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பேசப்பட வேண்டும். அதை எங்கள் தலைவர் செய்துள்ளார்.
இன்று உங்களுக்குக் கிடைத்திருக்கும் வருவாய்த் துறை அமைச்சர், சபாநாயகர் எல்லாமே நாங்கள் கொடுத்ததுதான். தமிழகத்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக அதிமுக விளங்கி வருகிறது.
கலைஞர் தன் வழக்குக்காக கண்ணை மூடிக்கொண்டு கச்சத்தீவை தாரை வார்த்தார். கைவிட்டுப் போன பிறகு தீர்மானம் போட்டு என்ன பயன்?
உண்மையை சொன்னால் திமுகவினருக்கு கோபம் வருகிறது, Reels போடுவதற்காக பேசுகிறோம் என்கிறார்கள். மக்களுக்கு செய்த துரோகத்தைதான் சொல்கிறோம்.
எங்கள் உறுப்பினர் படகு பிரச்சினையைப் பற்றித்தான் பேசினார். ஆனால், நீர்வளத்துறை அமைச்சர் கச்சத்தீவு என்று Open செய்தார். அவர் Open செய்துவிட்டு சிரித்துக்கொண்டிருந்த காட்சியும் தெரியும். சட்டத்துறை அமைச்சரும் நீண்ட நேரம் இதுகுறித்து விளக்கமளித்தார்.
விவாதம் முறையாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அதைத் திசைதிருப்ப வேண்டும் என்றால், ஒரு தலைப்புச் செய்தியைச் சொல்ல வேண்டும். அது குறித்து சட்டத்துறை அமைச்சர் கருத்து சொல்ல வேண்டும். நாங்கள் எழுந்து அதற்கு எதிர்வினையாற்ற வேண்டும்.
பின்னர், அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்து, வெளியில் அவர்கள் அமைதியாகப் பேசுவது போலவும், திமுக உறுப்பினர்கள் கொந்தளிப்பது போலவும் ஒரு Reels வெளியிடுவதற்காகத்தான் கச்சத்தீவு பிரச்சினையைப் பயன்படுத்துகிறார்கள்
எங்கள் பகுதியை மட்டும் காட்டாமல், ஆளுங்கட்சியினரையும் காட்டினால்தான் அவர்களின் செயல் என்ன என்பது வெளியே புரியும்.
கச்சத்தீவு 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம். அதை கொடுத்துவிட்டு 25 லட்சம் ஏக்கர் கொண்ட வாட்ஜ் பேங்க் (Wadge Bank) வாங்கினோம். அதனால் எவ்வளவு வளம் கிடைக்கிறது? முதல் ஒப்பந்தத்தை மட்டும் பேசுகிறார்கள், இரண்டாவது ஒப்பந்தத்தை பற்றி ஏன் பேசுவதில்லை?
கச்சத்தீவை கொடுத்ததே திமுக தான் என அமைச்சர் என்.ஆனந்த் கூறு. திமுகவினர் ஆக்ரோஷமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின் நடந்த உரையாடல்
கச்சத்தீவு குறித்து இந்த சபையில் பலமுறை விவாதித்துவிட்டோம். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் இந்திராகாந்தி தான் கச்சத்தீவை வழங்கினார்.
கச்சத்தீவை தாரை வார்க்க அன்றைய மத்திய அரசு முடிவு செய்த போது, அன்று இருந்த மாநில அரசு என்ன செய்தது? கருணாநிதியிடம் ஆலோசனை செய்த பிறகு தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. வழக்கை காட்டி மிரட்டி தான், அவர்களை ஒப்புக் கொள்ள வைத்தனர்.
Work like a horse, live like a hermit ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது புரவி(குதிரை) போல வேலை செய்ய வேண்டும், துறவி போல வாழ வேண்டும் என்று சொல்வார்கள். புரவி போல தமிழக மக்களுக்காக உழைக்கிறார், அவரது வாழ்க்கையில் துறவி போல எளிமையாக இருக்கிறார்.
நல்லவர்களை காப்பாற்றவும், தீயோரை ஒதுக்கி தர்மத்தை நிலைநாட்ட அவ்வப்போது தோன்றுவேன் என கண்ணபிரான் சொன்னது போல, தமிழகத்தின் அவதார புருஷனாக அவதரித்து, கடந்தகால ஆட்சியை அகற்றியுள்ளார் முதலமைச்சர் விஜய்.
பாமக சட்டமன்ற குழுத் தலைவர் சௌமியா அன்புமணிக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்ததற்கு நன்றி," என பாமக எம்எல்ஏ சிவக்குமார் பேச, குறுக்கிட்டு எழுந்த சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, "நடிகர் கமல் தலைமை ஏற்று நடத்தும் கட்சி மக்கள் நீதி மய்யம், நான் தலைமை தாங்கும் கட்சியின் பெயர் மனிதநேய மக்கள் கட்சி என்பதை கூறிக்கொள்கிறேன்" என தெரிவித்தார். இதை கேட்டு, பாமகவினர் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.
மீன்வளக் கூட்டுறவுச் சங்கங்கள் தங்களுக்குப் பொருத்தமான வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு, சொந்த வருவாயை ஈட்டும் வகையில் வலுப்படுத்தப்படும்.
20,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பயனடையும் வகையில், 18 மீன்வளக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆதரவளிக்கப்படும்.
TAFCOFED வாயிலாக 55 மீன்வளக் கூட்டுறவுச் கூட்டுறவுச் சங்கங்கள் ‘மீன் வளர்ப்போர் மற்றும் உற்பத்தியாளர் அமைப்புகளாக (FFPOS) வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன.
தமிழ்நாட்டின் 50 கடலோர கிராமங்களுக்கு உட்பட்ட பொருத்தமான கடற்பகுதியில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும்.
மீன் பிடிக்க கடலுக்குச்சென்ற காணாமல் போகும் மீனவர் குடும்பத்திற்கு வழங்கும் உதவித்தொகை உயர்த்தப்படும்.
கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணைகளில் ரூ.24 லட்சத்தில் மீன் விரலிகள் உற்பத்திப்பிரிவு நிறுவப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்
திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகத்தில் அதிநவீன மீன் சந்தை அமைக்கப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்
திருச்சியில் ரூ.34 கோடியில் இறைச்சி பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும் - அமைச்சர் கமலி
பருத்தி பயிர் பாதிப்பு குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு நாகை எம்எல்ஏ ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானம்
தவெக அரசின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படுமா? - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
வழக்குகள் வாபஸ் என்பது இதுதான் முதல்முறை என அமைச்சர் கூறியது தவறு. 5,000-க்கும் மேற்பட்ட போராட்டம் சார்ந்த வழக்குகளை ஸ்டாலின் வாபஸ் பெற்றார் - உதயநிதி
முந்தைய ஆட்சி என்று கூறாமல் வேறு எப்படி கூற முடியும்? - அமைச்சர் செங்கோட்டையன்
முதலமைச்சரின் அறிவிப்பை திமுகவும் வரவேற்கும் - சபாநாயகர்
முந்தைய ஆட்சியில் வழக்குகள் போடப்பட்டாதா? இல்லை? - சபாநாயகர்
திமுக ஆட்சியிலும் வழக்குகள் வாபஸ் என்பதற்கு வன்னிஅரசு சாட்சி - எ.வ.வேலு
முந்தைய அரசு என கூறினால் விவாதம் எழத்தான் செய்யும் - எ.வ.வேலு
போராட்டத்தை ஒடுக்குவதற்கு திமுக ஆட்சியில் வழக்குகள் பதிவு - நிர்மல்குமார்
வரலாற்று சிறப்புமிக்க முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி.
முதல்வர் பரந்த உள்ளத்துடன் விவசாயிகள் பக்கம் நின்று அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளார்.
அரசு கூறும்போது நீதிமன்றம் நிச்சயம் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
110 விதிகளின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை - சபாநாயர் விளக்கம்
110 விதியின் கீழ் அறிவிப்புகளை மட்டும் தான் முதலமைச்சர் வெளியிட முடியும், வழக்குகளை வாபஸ் பெறும் அறிவிப்பை எப்படி வெளியிடலாம்.
110 விதியின் கீழ் பேசும் முதல்வர் முந்தைய ஆட்சி குறித்த தவறான கருத்துகளை எப்படி தெரிவிக்கலாம்?
ஒரு திட்டத்திற்காக நிலம் எடுக்கும்போது போராட்டங்கள் நடக்கும், நீங்கள் செய்தாலும் அதுதான் நடக்கும்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நீதியை நிலைநாட்டத்தான் போராட்டக்காரர்கள் மீது வழக்கு பதியப்பட்டது - எ.வ.வேலு
அரசியல் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
நீட் போராட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட்
அறிவிப்புகளை வரவேற்க ராமச்சந்திரன் நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய கோரிக்கை
ஒட்டுமொத்த ஆசிரியர்கள், அவர்கள் குடும்பத்தினர் சார்பிலும் முதல்வருக்கு நன்றி கூறுகிறேன் - அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூரில் ரூ.236 கோடியில் குடிநீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்படும்.
கடலூரில் ரூ.8 கோடியில் பாரம்பரிய நடைபாதை அமைக்கப்படும்.
கன்னியாகுமரி கடற்கரை பகுதியை அழகுப்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு சான்று பெற ஏற்படும் காலதாமதத்தை தடுக்க டிஜிட்டல் முறையில் வழங்கப்படும்.
லைசென்ஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும், பயனாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
டிஜிட்டல் முறையில் டிரைவிங் லைசென்ஸ், பதிவுச்சான்று வழங்குவதால் தொலைந்து போனாலும் பதிவிறக்கம் செய்யலாம்.
விவசாயிகள், ஆசிரியர்கள் மீது திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து.
திருவண்ணாமலை மேல்மா சிப்காட் போராட்ட வழக்குகளும் ரத்து - முதலமைச்சர் விஜய்
பள்ளிகளை சுற்றியுள்ள சாலையில் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல பிரத்யேக நடைபாதை உருவாக்கப்படும்.
மாநிலம் முழுவதும் ரூ.305 கோடி செலவில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
ரூ.335 கோடி செலவில் அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை திட்டம் ரூ.2,400 கோடியில் மேற்கொள்ளப்படும்.
நாகர்கோவிலில் ரூ.960 கோடியில் புதிய பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்படும் - முதலமைச்சர் விஜய்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறன் அதிகரிக்கும் திட்டம் ரூ.410 கோடியில் செயல்படுத்தப்படும்.
சென்னை உட்பட அனைத்து நகரப்பகுதிகளின் சாலைகளும் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்
நாகர்கோவில் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் புதிய பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ஆவடி நகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் - முதலமைச்சர் விஜய்
மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
பழமையான 33 குடிநீர் திட்டங்கள் சீரமைக்கப்படும் - முதலமைச்சர் விஜய்
சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கையில் நிர்வாக சிக்கல் மட்டுமின்றி நிதி சிக்கலும் உள்ளது - அமைச்சர் ராஜ்மோகன்
தூய்மைப் பணியாளர்களை சந்தித்து முதலமைச்சர் பேசுவாரா? என தெளிவுபடுத்த வேண்டும்.
பணி நிரந்தரம் தொடர்பான தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 15 நாட்களை எட்டியுள்ளது - உதயநிதி ஸ்டாலின்
மணக்குடி கிராமத்தில் படகு சவாரி செய்ய தனியார் நிறுவனத்திற்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.
அனுமதியில்லாமல் படகு சவாரி, சாகச சுற்றுலா மேற்கொள்ளப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ராஜேஷ்
வணிக ரீதியில் சாகச சுற்றுலா செய்யும் முன்பு சுற்றுலாத்துறையிடம் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் - அமைச்சர் ராஜேஷ்
ஆட்கொல்லி புலியை தேடிக்கொண்டிருக்கிறோம் - அமைச்சர் ரஞ்சித் குமார்
உதகை அருகே இருவரை கொன்று தின்ற புலியை பிடிக்க வேண்டும் - போஜராஜன்
வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகளை நீக்க இயலாது - செங்கோட்டையன்
மத்திய அரசிடம் வலியுறுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் - அமைச்சர் ரஞ்சித்குமார்
வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ராஜேந்திரன்
காட்டுப்பன்றியை விவசாயிகள் சுட்டுக்கொல்வதாக அமைச்சர் பேரவையில் கூறுவது சரியல்ல.
பாதுகாக்கப்பட்ட வனவிலங்கான காட்டுப்பன்றியை சுட்டுக்கொல்வதாக கூறுவது அரசின் மீதான நல்லெண்ணத்தை கெடுக்கும் - தங்கம் தென்னரசு
காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொன்று சிக்கன்போல் விவசாயிகள் சாப்பிடுகிறார்கள், அதை நாம் கண்டுகொள்வதில்லை - அமைச்சர் ரஞ்சித் குமார்
காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் - தளி ராமச்சந்திரன்
தஞ்சை பெரிய கோவிலில் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - எம்எல்ஏ தஞ்சை சரவணன் கேள்விக்கு அமைச்சர் ரமேஷ் பதில்
தஞ்சை பெருவுடையார் கோவிலில் தினந்தோறும் அன்னதானம் வழங்க தனியாரையும் அனுமதிக்க வேண்டும் - தஞ்சை சரவணன்
அனைத்து கோவில்களையும் ஆய்வு செய்வதற்கு தயார். கோவில்களில் அன்னதான சேவையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரமேஷ்
விருத்தாச்சலத்தை கோவில் நகரமாக அறிவிக்க வேண்டும். அமைச்சர்கள் எங்களுடன் சேர்ந்து தொகுதிக்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும் - பிரேமலதா
திருத்தணி முருகன் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தேவை.
செவ்வாய் கிழமை தோறும் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தேவை - எம்எல்ஏ ஹரி கோரிக்கை
இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த கோரிக்கைகள் - அமைச்சர் ரமேஷ் பதில்
சொந்த காரணங்களால் சிலர் பணம் வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள். இன்னும் 6 மாதங்களில் பிரச்சனை சரி செய்யப்படும் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
கொரடாச்சேரி பகுதியில் ஒருநாளைக்கு 10 முறை பவர் கட் ஆகிறது - எம்எல்ஏ பூண்டி கலைவாணன் குற்றச்சாட்டு
சென்னையில் புதிதாக 6 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்
15 நிமிடங்களில் மின் வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது - அமைச்சர் நிர்மல்குமார்
ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டில் 6,000 டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்
பத்மநாபபுரம் - மலைக்கிராமங்களில் மின்வசதி இல்லை. துணை மின்நிலையம் அமைத்துத்தர வேண்டும் - செல்லசாமி
மதுரையில் 6 புதிய துணை மின் நிலையங்களுக்கான பணிகள் நடைபெறுகிறது - அமைச்சர் நிர்மல்குமார்
திருத்துறைப்பூண்டியில் 110KV துணை மின்நிலையம் தேவை - எம்எல்ஏ மாரிமுத்து கோரிக்கை
குறை மின்னழுத்தப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் தாழ்வாக உள்ள மின்பெட்டிகளை உயர்த்தி வைக்க நடவடிக்கை - அமைச்சர் நிர்மல்குமார்
மின்சாரத்துறை தொடர்பாக எம்எல்ஏக்கள் கோரிக்கை - அமைச்சர் நிர்மல்குமார் பதில்
நேரடி கொள்முதல் நிலையங்கள் - உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பதில் அளித்து வருகிறார்
ஆன்மிகமும் எங்கள் இதயங்களில் இருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்
எங்களுடைய சட்டசபை உறுப்பினர் கேட்டது உண்மையில் ஜலதோஷம் பற்றி தான் - உதயநிதி
பெரியார் இயக்கம் பற்றி பேசிய திமுக தோஷத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள். அறிவியல் பூர்வமாக இந்த பிரச்சனையை அணுகக்கூடியவர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தவெக அரசு அறிவியல் பூர்வமான ஒரு அரசை தான் மேற்கொண்டுள்ளது. தோஷம், பில்லி, சூனியம் அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. உறுப்பினருக்கு நம்பிக்கை இருந்தால் அதை செய்து கொள்ளலாம்.
ஜலதோஷம் தான் அதிகம் உள்ளது. பாம்புக்கடி தோஷம் எல்லாம் கேள்விப்படவில்லை - அமைச்சர் அருண்ராஜ்
பல்வேறு தொகுதிகளில் பாம்புக்கடி இருக்கிறது. அந்த தொகுதிகளில் எல்லாம் தோஷம் உள்ளது. அமைச்சர் நாக தோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனை இருந்தால் அதை செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலி பணியிடம் நிரப்பப்படும் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்
விரைவில் சங்கரன்கோவில் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்
சங்கரன்கோவில் மருத்துவமனை புதிய கட்டடத்தை விரைவில் திறந்து வைக்க வேண்டும் - திலீபன் ஜெயசங்கரன்
விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்
விழுப்புரத்தில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்
முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் சுற்றுச்சுவர், ஆடிட்டோரியம் ஏசி வசதி, உள் விளையாட்டு அரங்கம் தேவை - சிவக்குமார்
முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்திற்கு ஏசி வசதி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் அருண்ராஜ்
தேவை இருப்பின் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அருண்ராஜ்
வள்ளியூர் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்.
ராதாபுரம் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் - சதீஷ் கிறிஸ்டோபர்
ஆம்பூர் மருத்துவமனை பிரசவங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்து மகப்பேறு மைய வசதி ஏற்படுத்தப்படும் - அமைச்சர் அருண்ராஜ்
பண்ருட்டி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி தேவை ஏற்படும் பட்சத்தில் ஏற்படுத்தப்படும்.
பண்ருட்டி மருத்துவமனைக்கு 2 ஃப்ரீசர் பாக்ஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் - அமைச்சர் அருண்ராஜ்
கடலூர் GH கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
பண்ருட்டி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் - எம்எல்ஏ மோகன்
ஏப்ரல் 2026 முதல் ஜூலை 2026 வரை 39 பேர் பாம்பு கடித்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் - அமைச்சர் அருண்ராஜ்
பாம்பு கடி, விஷ முறிவு மருந்து மருத்துவமனையில் போதிய அளவில் கையிருப்பு உள்ளது - அமைச்சர் அருண்ராஜ்
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்பு கடி மருந்துகள் தேவை - எம்எல்ஏ மோகன்
சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைகளின் மீதான மானியக்கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறும்.
விவாதத்துக்கு பதில் அளித்து பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், கால்நடை துறை அமைச்சர் கமலி ஆகியோர், துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.