

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் குறைந்து, பின்னர் அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 16-ந்தேதியில் இருந்து மீண்டும் விலை குறையத் தொடங்கி இருக்கிறது. கடந்த 16-ந்தேதி சவரனுக்கு ரூ.80-ம். 17-ந்தேதி ரூ.240-ம் குறைந்திருந்த நிலையில், நேற்றும் விலை சரிந்து காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 30-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 240-க்கும் விற்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் சரிந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 950-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.380 குறைந்து ரூ.13,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
17-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,240
16-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,480
15-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,560
14-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,880
18-06-2026- ஒரு கிராம் ரூ.270
17-06-2026- ஒரு கிராம் ரூ.275
16-06-2026- ஒரு கிராம் ரூ.275
15-06-2026- ஒரு கிராம் ரூ.280
14-06-2026- ஒரு கிராம் ரூ.270